தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
- தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
- சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சியில் தூய்மை பணிகள் செய்து வரும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மாங்கனி தலைமையிலான மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசிகள் செலுத்தல், ரத்த பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கினர். இந்த முகாமை நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், திருமங்கலம் நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன் சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், ஜஸ்டின் திரவியம், ஜமீலா பவுசியா, சுகாதார அலுவலர் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.