உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-05 08:48 GMT   |   Update On 2022-09-05 08:48 GMT
  • மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • அலுவல் நேரங்களில் அரசு பஸ்களை கூடுதலாக இயக்க ேகாரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை

மதுரை மாநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெத்தானியாபுரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு பஸ்சில் பயணம் செய்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவன் தவறிவிழுந்து பலியானதன் காரணமாக அலுவல் நேரங்களில் அரசு பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும்.

பயணிகள் பஸ்படிகட்டில் பயணம் செய்வதை அனுமதிக்க கூடாது. நெருக்கடியான நேரத்தில் முறையாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். தேவையான இடங்களில் சிக்னல் அமைக்க வேண்டும். இறந்த மாணவன் குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். குரு தியேட்டர் சந்திப்பு அருகில் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருசாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.பகுதிகுழு செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நரசிம்மன் தொடங்கி வைத்தார். மேற்கு 1-ம் பகுதிகுழு செயலாளர் கணேசன், பகுதிகுழு உறுப்பினர் சுதாரணி ஆகியோர் பேசினார். மாவட்டச் செயலாளர் கணேசன் நிறைவுரையாற்றினர்.

இதில் மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன், மாவ ட்டக்குழு உறுப்பினர்கள் பாண்டி, மல்லிகா, சிவராமன், கவுன்சிலர் ஜென்னியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Tags:    

Similar News