உள்ளூர் செய்திகள்
மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- அன்னதானம் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோணப்பட்டி கிராமத்தில் உள்ளது பகவதிஅம்மன் என்ற மந்தையம்மன் கோவில் உள்ளது.
இங்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோணப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.