உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பார்வையிடுவதையும், கைதான ராஜபாண்டியையும் காணலாம்.

800 மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

Published On 2022-09-11 08:21 GMT   |   Update On 2022-09-11 08:21 GMT
  • மதுரையில் 800 மது பாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
  • போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை,

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் மதுபானங்கள் கடத்தப்படு வதாக போலீசுக்கு தகவல் வந்தது. மீனாட்சி அம்மன் கோவில் சரக உதவி கமிஷனர் காமாட்சி, தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் மாடசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கிய ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (வயது 32) என்பது தெரிய வந்தது.

அவரிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 865 மது பாட்டில்கள், ரூ.2930 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகரில் சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

Similar News