உள்ளூர் செய்திகள்

சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை

Published On 2023-04-21 08:36 GMT   |   Update On 2023-04-21 08:36 GMT
  • வருகிற 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84(1)ல், அரை யாண்டுக்கான சொத்துவரியை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.

அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். ஏப்ரல் 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், மாநகராட்சி மைய அலுவ லகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பதாகைகள் வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், ரேடியோ, செய்தித்தாள்கள் மற்றும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சி வாயிலாக சொத்துவரியை உரிமையாளர்கள் செலுத்து வதற்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியை மதுரை மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்கள் மற்றும் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் "TN Urban Esevai" செயலி வாயிலாக வரி செலுத்து வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையை பெற்றிடுமாறும், மதுரை மாநகராட்சி பகுதி களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News