உள்ளூர் செய்திகள்

வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த அண்ணன்-தம்பி கைது

Published On 2023-08-30 14:11 IST   |   Update On 2023-08-30 14:11:00 IST
  • பெண்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.
  • திருட்டுத்தனமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

மதுரை

பெருங்குடி கணபதி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முத்துராஜா (வயது 30). இவருடைய சகேகாதரர் அங்கு குமார் (32). இவர்கள் இருவரும் பெண்கள் தனியாக குளிக்கும் போதும் அவர்கள் உடைமாற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்த னமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

பின்னர் அந்த வீடியோவை காட்டி பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறித்து வந்தனர்.

இந்த நிலையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் விஷேசத்தில் அவர்கள் கலந்துகொண்டனனர்.அங்கு கல்லூரி மாணவி ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். இது அந்த மாணவிக்கு தெரிய வந்தது.அவர் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது அந்தப்பெண்ணை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். தர மறுத்தால் சமூக வலை தளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரி டம் கூறினார். அவர்கள் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவுசெய்து முத்துராஜா, அங்கு குமாரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர்கள் பலபெண்களை வீடியோ படம் எடுத்து பணம் பறித்து வந்த திடுக்கிடும் தகவல் வெளி யானது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News