டாக்டர். சரவணன்
- மதுரையில் இன்று மாலை பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.
- மத்திய பா.ஜ.க. அரசு 8 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளது.
மதுரை
பாரதீய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரத பிரதமர் நரேந்திமோடி தலைமையில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு 8 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. மோடி ஆட்சி காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து தரப்பு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கருத்தரங்குகள், பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மதுரை மாநகரிலும் பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மோடி அரசின் சாதனைகள் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது. மேலும் ரத்ததானம், மருத்துவ முகாம், சைக்கிள் பேரணி போன்றவையும் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பழைய நடராஜ் தியேட்டர் அருகில் இன்று மாலை 4 மணிக்கு பாரதீய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
எனது (டாக்டர். சரவணன்) தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். மேலும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
எனவே இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தொண்டர்களும், பொது மக்களும் அணி, அணியாக வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.