உள்ளூர் செய்திகள்

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-12 14:32 IST   |   Update On 2023-05-12 14:32:00 IST
  • ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • மீட்டர் கட்டணத்தை நீதி மன்ற உத்தரவுப்படி மாற்றி அமைத்திட வேண்டும்.

மதுரை

மதுரை மாநகர் சி.ஐ. டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தியதை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் அநியாய அபதாரம் விதிப்பதை கைவிட வேண்டும். 2013 மீட்டர் கட்டணத்தை நீதி மன்ற உத்தரவுப்படி மாற்றி அமைத்திட வேண்டும். சட்ட விரோதமாக இயங்கும் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்.

ஆட்டோ தொழி லாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலக பகுதி யில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள பகுதியில்ஆர்ப்பாட்டம் செய்தனர். 

Tags:    

Similar News