உள்ளூர் செய்திகள்

சிகிச்சை பெற்றவர்கள் மீது தாக்குதல்

Published On 2023-05-21 14:01 IST   |   Update On 2023-05-21 14:01:00 IST
  • சிகிச்சை பெற்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய நோயாளிகள் அலறி அடித்து ஓடினார்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே விறகு போடுவதில் தகராறு ஏற்பட்டது.

இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. காயமடைந்த இருதரப்பின ரும் மேலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆத்திர மடைந்த ஒரு தரப்பைச் சேர்ந்த உறவினர் நேற்று மாலை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து சிகிச்சை பெற்றுவரும் எதிர் தரப்பினரை கம்பி, ஆயுதம் கொண்டு தாக்கினார். இதனால் வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.

சம்பவ இடத்திற்கு வந்த துப்புரவு பணியாளர் மற்றும் காவலாளி அவர் களை தடுத்து கம்பிகளை பிடுங்கினர். கம்பியை பிடுங்கும்போது துப்புரவு தொழிலாளிக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை மருத்துவர் ஜெயந்தி மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் ெகாடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags:    

Similar News