உள்ளூர் செய்திகள்

மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் அதிகாரிகள் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டு மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 679 கிலோ பழங்கள் பறிமுதல்

Published On 2023-04-27 09:00 GMT   |   Update On 2023-04-27 09:00 GMT
  • ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 679 கிலோ பழங்கள் பறிமுதல் செய்தனர்.
  • மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. எனவே உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரித்து வரு கிறது. பொதுமக்கள் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மாம்பழம், திராட்சை, வாழைப்பழம், கிர்ணி பழம் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் மாட்டுத் தாவணி பழ மார்க்கெட்டில் பழங்கள் ரசாயன கல் வைத்து செயற்கை முறை யில் பழுக்க வைக்கப்படுவ தாக மாவட்ட உணவு பாது காப்பு துறைக்கு தொடர்ச்சி யாக புகார் வந்தது. எனவே அங்கு அதிரடியாக சோதனை நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்த னர்.

அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையில் ஊழியர்கள் நேற்று இரவு மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாரிகள் ஒவ்வொரு கடைகளாக சென்று ஆய்வு செய்தனர். அங்கு உள்ள சுமார் 140 கடைகளும் தணிக்கை செய்யப்பட்டது.

அப்போது சில கடை களில் மாம்பழம், திராட்சை, கிர்ணி பழம், வாழைப்பழம் ஆகி யவை செயற்கை ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டது கண்டறி யப்பட்டது. இதனை தொடர்ந்து உணவு பாது காப்பு துறை அதி காரிகள் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப் பட்ட 154 கிலோ மாம்பழம், 45 கிலோ திராட்சை, 60 கிலோ தண்ணீர்பழம், 18 தார் (420 கிலோ) வாழைப் பழங்கள் என மொத்தம் 679 கிலோ பழங்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும்.

மாட்டுத்தாவணி வியாபாரிகள் கடந்த சில மாதங்களாகவே பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிலோ கணக்கில் பழங்கள் அழுகி உள்ளன. அவற்றை யும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து செயற்கை முறையில் பழுக்க தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட கடைக ளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

உடலுக்கு தீமை விளைவிக்கும் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News