கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 பேர் கைது
- கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வெங்கடேஷ்குமார் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.
மதுரை
ஜெய்ஹிந்த்துபுபுரம் புலிப்பாண்டியன் தெருவை சேர்ந்த காந்தி மகன் வெங்கடேஷ்குமார் (28). வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருபை சேர்ந்த சதுரகிரி மகன் செல்வகுமார் (21). இருவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. வெங்கடேஷ் குமாரின் தந்தை ராமையா தெருவில் சென்றார்.
அப்போது செல்வகுமார், காவேரி மணி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வழிமறித்து ஆபாசமாக பேசி தாக்கினர். எதிர்தரப்பும் தாக்குதல் நடத்தியது. இது குறித்து வெங்கடேஷ்குமார் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சதுரகிரி மகன் செல்வகுமார் (21), சோலை அழகுபுரம் இந்திரா நகர் பாலமுருகன் மகன் காவேரி மணி (19), 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதே வழக்கில் செல்வகுமார் கொடுத்த புகாரின்பேரில் புலிப் பாண்டியன் தெரு பால்சாமி மகன் காந்தி, எம்.எம்.சி. காலனி, ஆறுமுக நகர் முகமது ரபீக் ராஜா (42), ராமையா தெரு பாலமுருகன் (42) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.