பார் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது
- பார் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வீடு புகுந்து அவரை தாக்கினர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 53). இவர் மதுரை அய்யர்பங்களாவில் உள்ள தனியார் பாரில் பாதுகாவலராக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு 10 பேர் கும்பல் பாருக்கு வந்தது. அவர்கள் குடிபோதையில் தகராறு செய்தனர். இதை நாகராஜ் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் அவரை தாக்கியது. அப்போது வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
இது குறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோசாகுளம் திருக்குமார் (39), அய்யர் பங்களா எழில் நகர் பிரபு (43), பரசுராம்பட்டி பாண்டியன் (36), புதூர் மகாலட்சுமி நகர் ரமேஷ் (39), புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளை ஆண்டிப்பட்டி கார்த்திக் ராஜா (35), பரசுராம்பட்டி இஸ்மாயில் தெரு ராஜா (49) ஆகிேயாரை கைது செய்தனர்.
மதுரை ஒத்தப்பட்டி சிங்காரபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல்(26). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. ராகுல் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து அவர் சந்தேக நபரின் தாயாரிடம் புகார் தெரிவித்தார். சம்பவத்தன்று இரவு ராகுல் வீட்டில் இருந்தார். அங்கு வந்த கும்பல் வீடு புகுந்து அவரை தாக்கினர். வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சூறையாடப்பட்டது.
இது குறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்திய நாதபுரம் சாதிக் பாட்சா மகன் அப்துல் மாலிக் (19), மகபூப்பாளையம் அன்சாரி நகர் பீர்முகமது மகன் முகமது ஆசிக் (19) ஆகியோரை கைது செய்தனர்.