உள்ளூர் செய்திகள்

ஜெயிலுக்கு சென்றவர் வீட்டில் நகைகளை திருடி ஆடம்பரமாக செலவு செய்த 3 பேர் கைது

Published On 2023-03-19 09:20 GMT   |   Update On 2023-03-19 09:20 GMT
  • ஜெயிலுக்கு சென்றவர் வீட்டில் நகைகளை திருடி ஆடம்பரமாக செலவு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது

மதுரை 

மதுரை கோரிப்பாளை யம் கான்சாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி (வயது 83). இவர் மதுரா கோட்ஸ் நிறு வனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படு கிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தோணி ஒரு கொலை வழக்கில் கைதானார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 110 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். வீடு திரும்பிய அந்தோணி கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந் தார். இதுபற்றி அவர் தல்லா குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

இதுபற்றி அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷ னர் ஜெகன்நாதன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (36), கணேசன் (46), செல்வகுமார் (33)ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் கைதான விஜயகுமார் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார்.

நகையை கொள்ளை யடித்த 3 பேரும் தனியார் வங்கியில் அடகு வைத்து ரூ.24 லட்சம் வாங்கி உள்ள னர். அந்த பணத்தை 3 பேரும் ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News