உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டாக்டர் லோகநாதன் ஒப்படைத்தபோது எடுத்தபடம். அருகில் துணை கமிஷனர்கள் உள்ளனர்.

மீட்கப்பட்ட 253 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

Published On 2023-09-14 14:17 IST   |   Update On 2023-09-14 14:17:00 IST
  • மதுரை மாநகர பகுதிகளில் மீட்கப்பட்ட 253 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • மாயமான 253 செல்போன்கள் மீட்கப்பட்டன.

மதுரை

மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 253 செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதைய டுத்து மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசாரின் அதி ரடி நடவடிக்கை மூலம் மாயமான 253 செல்போன் களும் மீட்கப்பட்டன.

இதில் கோவில் சரகத்தில் 12, தெற்கு வாசல் சரகத்தில் 13, திடீர் நகர் சரகத்தில் 73, திலகர் திடல் சரகத்தில் 5, அவனியாபுரம் சரகத்தில் 87, செல்லூர் சரகத்தில் 17, அண்ணாநகர் சரகத்தில் 31 செல்போன்களும் அடங்கும். மீட்கப்பட்ட செல்போன் களை அதன் உரிமையாளர்க ளிடம் இன்று காலை ஒப்ப டைக்கப்பட்டது.

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் டாக்டர் லோகநாதன், துணை கமிஷனர்கள் பிரதீப் (தெற்கு), சினேகபிரியா (வடக்கு), மங்களேஸ்வரன் (தலைமையிடம்) மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் செல்போன்கள் ஒப்படைக் கப்பட்டன.

மேலும், ரூ.1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மதிப் புள்ள சுமார் 279 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பிலான 4 இருசக்கர வாகனங்கள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 லேப்டாப்புகள் ஆகியவையும் மீட்கப்பட்டு கோர்ட்டு மூலம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

மேற்கண்ட அதிரடி நட வடிக்கைகளை திறம்பட செய்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் டாக்டர் லோகநாதன் பாராட்டினார்.

Tags:    

Similar News