உள்ளூர் செய்திகள்
- மதுரையில் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அவர்கள் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
மதுரை
எஸ்.எஸ். காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேரரசி கோச்சடை மெயின்ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது சந்தேகப்படும்படி நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்து சோதனை செய்தார். அவர்கள் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் பாறைப்பட்டியை சேர்ந்த முருகக்கடவுள் மகன் அரவிந்த் குமார் (20), குறிஞ்சி நகரை சேர்ந்த கருப்பு என்று தெரியவந்தது.
இருவரும் கைது செய்யப்பட்டனர்.