- இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானtர்கள்.
- பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை கடச்சனேந்தல் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் தம்பிராஜ். இவரது மகன் பால்பாண்டி(வயது30). இவருக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்த்துவிட்டு வருவதாக பால்பாண்டி, மனைவியிடம் கூறி சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வினோதினி அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை தேடி வருகின்றனர்.
இளம்பெண்
மதுரை அவனியா புரத்தை அடுத்துள்ள பெருங்குடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சிவரஞ்சனி(20). சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்றுவிட வீட்டில் இருந்த சிவரஞ்சனி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.