உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 1,500 போலீசார் பாதுகாப்பு

Published On 2022-12-24 08:49 GMT   |   Update On 2022-12-24 08:49 GMT
  • மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.

மதுரை

மதுரையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும் நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மதுரையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

இதற்காக அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மின்விளக்குகள் மற்றும் அலங்கார விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.

நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்க ளுக்கு சென்று இந்த பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.

இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பிரார்த்தனைக்கு செல்பவர் களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரது உத்தரவு பேரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News