உள்ளூர் செய்திகள்

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்தபடம்.

நெல்லையில் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-12 09:12 GMT   |   Update On 2023-09-12 09:12 GMT
  • வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக ஏராளமான பெண்கள் கஷ்டப்படுகின்றனர்.
  • நடுத்தர பெண்கள் கட்டாயத்தின் பெயரில் நுண் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

நெல்லை:

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நெல்லை மாவட்ட குழு சார்பில் இன்று பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் லதா தலைமை தாங்கினார்.

ஜெயந்தி, சந்திரா, சமாதானம், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் லட்சுமி சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வேலையில்லா திண்டாட்டத்தின் காரண மாக வீட்டு வாடகை கூட கொடுக்க வழி இல்லாமல் ஏராளமான பெண்கள் கஷ்டப்படுகின்றனர்.

இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும் நடுத்தர பெண்கள் கட்டாயத்தின் பெயரில் நுண் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

இதனால் பெரும்பாலான பெண்கள் கந்து வட்டியில் சிக்கி தவித்து வருகின்றனர். அதனை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பொன், மாவட்ட துணை தலைவர் முத்துமாரி, துணை செயலாளர் அமுதா, மாவட்ட குழு உறுப்பினர் மரகதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News