உள்ளூர் செய்திகள்

கன்னிகைப்பேர் கிராமத்தில் லாரி மோதியதில் டிராக்டர் உள்பட மூன்று வாகனங்கள் சேதம்

Published On 2023-05-06 16:10 IST   |   Update On 2023-05-06 16:10:00 IST
  • இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
  • இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் எதிரே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு இன்று விடியற்காலை சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்ற லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிராக்டர் மற்றும் மினி வேன், கார் ஆகியவற்றின் மீது கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.

இவ்விபத்தால் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், இந்த விபத்தால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடுப்பாடுகளை சீர் செய்து வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தின் காரணமாக இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News