உள்ளூர் செய்திகள்

கோவையில் நாளை லோக் அதாலத்

Published On 2022-11-11 09:08 GMT   |   Update On 2022-11-11 09:08 GMT
  • தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்டத்தில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது.
  • பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொள்ளலாம்.

கோவை,

நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்வதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்டத்தில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது.

இந்த மக்கள் நீதிமன்றமானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலூர் ஆகிய நீதிமன்றங்களில் நடக்கிறது.

இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணும் வகையில் பல்வேறு அமர்வுகளாக நடக்கிறது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொள்ளலாம். இந்த லோக் அதாலத்தை பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண பயன் படுத்திக்கொள்ளலாம்.

Tags:    

Similar News