சமையல் எண்ணெய் ஏற்றி சென்ற லாரி தாறுமாறாக ஓடி சாக்கடை ஓடையில் நின்ற போது எடுத்த படம்.
சமையல் எண்ணெய் ஏற்றி சென்றதாறுமாறாக ஓடி சாக்கடை கால்வாய்க்குள் புகுந்த லாரி
- தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
- பரமத்தி டாஸ்மாக் கடை அருகே, சென்ற போது நாகராஜுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் லாரி தாறுமாறாக சென்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60). இவர் பரமத்தி- மாணிக்கநத்தம் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தனியார் ஆயில் மில்லில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பரமத்தி டாஸ்மாக் கடை அருகே, சென்ற போது நாகராஜுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் லாரி தாறுமாறாக சென்றது. லாரி தாறுமாறாக ஓடியதில் 2 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. ஆனால் லாரி டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டதால் லாரி அப்பகுதியில் உள்ள சாக்கடை ஓடையில் புகுந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக டாஸ்மாக் கடைக்கு வெளியே நின்றவர்கள் மீது மோதாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் டிரைவர் நாகராஜை மீட்டு அருகில் இருந்த பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.