பரமேஸ்வரி
கள்ளக்குறிச்சியில் மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
- கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சித்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
- கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.15,000ஆயிரம் ரூபாய் அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பரமேஸ்வரி (வயது28), இவர் சம்பவத்தன்று தனது கணவர் சுப்ரமணியன் என்பவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையின் காரணமாக தனது மகள் கரிஷ்மா (9) என்பவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்துசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சித்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விசாரணை முடிவுற்று நேற்று கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கீதாராணி தீர்ப்பு அளித்தார். அதில் அரசுதரப்பில் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் பரமேஸ்வரி குற்றவாளி என்று உறுதி செய்து கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும் தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.15,000ஆயிரம் ரூபாய் அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.