உள்ளூர் செய்திகள்
- பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- பகல் நேரங்களில் அங்கு உள்ள பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்து வருகிறது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே நொண்டி மேடு பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒரு சிறுத்தை நடமாடி வருகிறது. அது பகல் நேரங்களில் அங்கு உள்ள பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்து வருகிறது.
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வருவது கிராம மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர்.
ஊட்டி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சிறுத்தை நடமாட்டம் தொடரும் பட்சத்தில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.