உள்ளூர் செய்திகள்
கோவையில் இன்று வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை,
கோவை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக இன்று கோர்ட்டு வளாகத்துக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோவை கோர்ட்டுகளில் போதிய ஆட்கள் இல்லாமல், போதிய ஊதிய முறைகள் இல்லாமல் இருப்பதை முறைபடுத்த வேண்டும். பொது மக்களை பாதிக்கின்ற ஈ-பைலிங் முறையை ஏற்க மாட்டோம் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.