உள்ளூர் செய்திகள்
- மணிவண்ணன அரசு டாஸ்மாக் கடை மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
- லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மணிவண்ணன் பலியானார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் மணிவண்ணன் (வயது 53). இவர் முத்துப்பேட்டை ஆசாத் நகர் கோரை ஆற்று கரையோரம் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது ஆங்காடு கடைதெரு அருகே பின்புறம் தூத்துக்குடியிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற மீன் பாடி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.