உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
ஒட்டன்சத்திரம் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
- தொழிலாளி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமானார்.
- வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு சுரைக்காய்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 57). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமானார்.
தனது மகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட அவரது பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்தனர். அவரிடம் விசாரித்ததில் ராமர் தன்னை பலாத்காரம் செய்ததை தெரிவித்தார். இதனையடுத்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.