உள்ளூர் செய்திகள்
கூலித் தொழிலாளி தூக்குபோட்டு சாவு
குடும்ப பிரச்சினை காரணமாக கருவேல மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூார்:
மேல்புவனகிரி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சின்னராஜ் (வயது 38). கூலித் தொழிலாளி இவரது மனைவி பிரியா (25), இவர்களுக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மேல்புவனகிரியில் உள்ள தில்லை வெள்ளாற்றங்கரை அருகே உள்ள கருவேல மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புவனகிரி போலீசார் உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.