உள்ளூர் செய்திகள்

கோவிலின் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேக தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2023-01-31 09:18 GMT   |   Update On 2023-01-31 09:18 GMT
  • சோமநாத சுவாமி கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.
  • சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து லட்சார்ச்சனை தொடங்கியது. 2-வது நாளிலும் லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தன. நிறைவு நாளான இன்று காலை விநாயகர் பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம். பூரண ஆஹூதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

பின்னர் சுவாமி மற்றும் அம்பாள் கோபுர விமானங்களில் கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது பக்தர்கள் 'அரகர மகாதேவா' என்று முழக்கம் எழுப்பினர்.இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.இதன் பின்னர் லட்சார்ச்சனை நிறைவுக்கு பின் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தன.

இதில் பக்த ஜனசபை சார்பில் சண்முக வெங்கடேசன், தெரிசை அய்யப்பன், தங்கமணி, கற்பக விநாயகம், சங்கரலிங்கம், இளைய பெருமாள், தொழிலதிபர் பெருமாள், பேராசிரியர் அசோக்குமார் மற்றும் திருமுறை பன்னிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.

ஆலய பூஜகர் அய்யப்ப சிவாச்சாரியார் குழுவினர் கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா மற்றும் பக்தஜன சபையினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News