உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா நடந்தது.

மயிலாடுதுறை செம்பனார்கோவில் விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேக விழா

Published On 2023-04-27 15:09 IST   |   Update On 2023-04-27 15:09:00 IST
  • வரசித்தி விநாயகர் கோயிலுக்கு முதலில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
  • கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு சென்றது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், கீழையூர் கிராமம் உடையாருப்புத் தெருவில் அமைந்துயிருக்கும் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு முதலில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பின்னர் சுந்தர விநாயகர் கோயிலுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

இதனை தொடர்ந்து ஸ்ரீ உத்திராபதியார் கோயிலுக்கு புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனவீரபாண்டியன் மற்றும் தெருவாசிகள் தலைமையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

இதற்கு முன்பாக விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை பூஜை நேற்று பூர்ணகதி செய்து கடம் புறம்பாடு நடைபெற்றது.

அப்போது சுந்தரமூர்த்தி கசிவாச்சாரியார் தலைமையிலான விக்னேஷ்வர் குருக்கள் மற்றும் வேத விற்பனர்கள் சிவ ஆகம முறைப்படி மந்திரங்கள் ஓத வான வேடிக்கையுடன் கடம் புறப்பாடு கோயிலை வளம் வந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு சென்றது அப்போது கருடன் வட்டமிட பக்தர்கள் சிவ கோஷங்களை எழுப்ப கடத்தில் உள்ள புனித நீரை எடுத்து கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள உத்திராபதியார் சிவலிங்கத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் லத்தீஸ் சஞ்சீவா கும்பலே குடும்பத்தார்கள், விழா குழு தலைவர்கள் ராசு என்கின்ற நாகராஜ், சீனிவாசன், கலியபெருமாள், சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் திருவாளர் சுந்தரி ஜெயச்சந்திரன், துணை தலைவர் அனிதா வீரப்பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் சியாமளா ஸ்ரீதர், முன்னாள் கிராம உதவியாளர் சேகர், சுந்தரம், நம்பிராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மேகநாதன், மற்றும் விழா குழுவினர் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News