உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் அரசு கல்லூரியில் கலந்தாய்வு மூலம் 158 மாணவ-மாணவிகள் சேர்க்கை

Published On 2022-08-06 09:38 GMT   |   Update On 2022-08-06 09:38 GMT
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு கலந்தாய்வு நடைபெற்றது.
  • 2 நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் 158 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குமாரபாளையம்:

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு கலந்தாய்வு கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது.

பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வானது ஆக. 4ல் சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கும், ஆக. 5ல் பொதுப்பிரிவு மாணாக்கர்களுக்கும் நடைபெற்றதுஇந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணைய தளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டது. மேலும் மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் மூலமும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

இணைய வழியில் பதிவு செய்த சிறப்பு ஒதுக்கீடு கோரும் மாணவர்கள், பொதுப்பிரிவு மாணாக்கர்கள் தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து கலந்தாய்வில் கலந்து கொண்டனர். 2 நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் 158 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

Tags:    

Similar News