உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு -31-ந் தேதி நடக்கிறது

Published On 2022-10-28 15:05 IST   |   Update On 2022-10-28 15:05:00 IST
  • 31-ந் தேதி, மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
  • இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் பங்கேற்கலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி முதல்வர் அனுராதா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கான எம்.ஏ.,(தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்), எம்.எஸ்.சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்த வர்களுக்கும், துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்று விண்ணப்பித்தவர்களுக்கும் வருகிற 31-ந் தேதி, மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வின் போது, மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், நான்கு மார்பளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள் ஆகிய வற்றுடன், கலைப்பாடப் பிரிவுக்கு ரூ.1750, அறிவியல் பாடப்பிரிவுக்கு ரூ.1810, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு ரூ.2,010 சேர்க்கைக்கான கட்டணத்தை செலுத்தும் வகையில் வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News