உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,270 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
- ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 930 டோஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
- 12 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,270 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. காலை 7 மணி முதல் மாலை வரை முகாம் நடந்தது.
இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகள், 333 ஊராட்சி பகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்டத்தில் முகாமிற்காக நேற்று ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 930 டோஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று மாலை வரையில் 36 ஆயிரத்து 687 பேர் முதல், 2-வது மற்றும் பூஸ்டர் டோஸ்களும், 12 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.