உள்ளூர் செய்திகள்
தயார் நிலையில் மீட்பு குழுவினர்
- மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்
- காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கரூர்:
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோரப் பகுதிகளில், மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்' என மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேட்டூர் அணையில் இருந்து, காவிரி ஆற்றில் வினாடிக்கு, இரண்டு லட்சம், கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில், தவிட்டுப்பாளையம், நன்னியூர், நெரூர், குளித்தலை உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில், பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற, 120 போலீசார், வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில், துரிதமாக செயல்பட்டு, மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவர். எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.