உள்ளூர் செய்திகள்

காவல்துறை கொடி அணி வகுப்பு

Published On 2022-08-27 08:44 GMT   |   Update On 2022-08-27 08:44 GMT
  • காவல்துறை கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
  • விநாயகர் சதுர்த்தியை விழாவை முன்னிட்டு நடந்தது

கரூர்:

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கரூரில் காவல்துறை கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. இதனையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டத்தின் பலவேறு இடங்களில் ஏராளமான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு 3ம் நாள் கரூர் 80 அடி சாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரியில் கரைக்கப்படுகிறது.

கடந்தாண்டு விநாயகர் சிலை நிறுவும்போது விரும்ப தகாத ஒரு சில சம்பங்கள் ஏற்பட்டன.அதனால், நடப்பாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

கரூர் 80 அடி சாலையில்கொடி அணி வகுப்பை ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தொடங்கிவைத்து அணி வகுப்பில் பங்கேற்றார். கோவை சாலை, பேருந்து நிலைய ரவுண்டானா, ஜவஹர் பஜார், தலைமை அஞ்சல் நிலையம் வழியாக 5 ரோட்டில் கொடி அணி வகுப்பு நிறைவு பெற்றது.

பாதுகாப்பு கவச உடை, தலைகவசம் அணிந்து, பாதுகாப்பு தடுப்பு, குச்சி ஏந்தியும், அதிரடி படையினர், தாலுகா போலீஸார், ஆயுதப்படையினர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீஸார் கொடி அணி வகுப்பில் சென்றனர்.

Tags:    

Similar News