- நடிகர் சாந்தனு நெகிழ்ச்சியுடன் கரூரில் பேட்டி
- ராவண கோட்டம் பார்க்க வந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார்
கரூர்,
"என் பாதை வேறு, அப்பாவின் பாதை வேறு,'' என, நடிகர் சாந்தனு தெரிவித்தார். கரூரில் எல்லோரோ தியேட்டரில், ராவணகோட்டம் படம் திரையிடப்பட்டுள்ளது. அதில், கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் சாந்தனு நேற்று மதியம், தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார். சிறிது நேரம் படம் பார்த்த சாந்தனு, ரசிகர்களுடன் செல்பி எடுத்து கலந்துரையாடினார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும், ராவண கோட்டம் படத்துக்கு, ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்களை நேரில் சந்தித்து, பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கு சென்றாலும், என் தந்தை பாக்கியராஜ் குறித்துதான், ரசிகர்கள் கேட்கின்றனர். அவர் கதை எழுதி, டைரக்ஷன் செய்து நடித்தார். என் பாதை வேறு, அவர் பாதை வேறு. அடுத்ததாக, கிரிக்கெட் தொடர்பான படத்தில் உள்ளேன். நடிகர் விஜய்யுடன் நடித்ததில் நடிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால், விஜய்யுடன் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.