சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம்
- சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
- கர்ப்பிணியான சிறுமிக்கு கரு கலைந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
குளித்தலை,
குளித்தலை அருகே போத்துராவு த்தன்பட்டியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி கருப்பையா (29) கிருஷ்ணராயபுரம், கருப்பூர் பகுதியைச் சேர்ந்த (10 ம் வகுப்பு படித்து இடையில் நின்றவர், ) உறவினர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று சிறுமியினை குழந்தை திருமணம் செய்து உள்ளார். போத்தரவுத்தன்பட்டியில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்த அவர் வீட்டில் சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை தனிமையில் இருந்ததாகவும், இதனால் கர்ப்பிணியாக இருந்துள்ளார், சில தினங்களுக்கு முன்பாக சிறுமிக்கு அதிக வயிற்று வலி வரவே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது ஏற்கனவே கரு கலைந்து விட்டதாகவும் கூறி தகவலை மருத்துவமனை அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்று சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றும், குழந்தை திருமணம் செய்ததாக கிருஷ்ணராயபுரம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சுகுணா கொடுத்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கருப்பையாவை போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண சட்டத்தில் கைது செய்தார்,இவரை கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.