உள்ளூர் செய்திகள்

நீர் நிலைகளில் அசுத்தம் கலப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

Published On 2023-03-22 13:44 IST   |   Update On 2023-03-22 13:44:00 IST
  • கரூரில் பள்ளி மாணவர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
  • வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகம்

கரூர்,

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் விஷ்வக் நித்தின் கரூர் ஐந்து ரோடு அமராவதி ஆற்று படுகையில், தனது பெற்றோர் மற்றும் குழுவினருடன் இணைந்து ஆற்றில் அசுத்தம் கலப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்த செயல் விளக்க பிரச்சாரத்தை நடத்தினார்.இதுகுறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வீடு வீடாக வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.தொடர்ந்து அவர் கரூரில் உள்ள அமராவதி ஆற்றங்கரையோரம் மற்றும் வாங்கல், மோகனூர், ஆகிய பகுதியில் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நீர் நிலைகளில் இயற்கை உபாதையை கழிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


Tags:    

Similar News