உள்ளூர் செய்திகள்

திங்கள்நகரில் வாரச்சந்தை திங்கட்கிழமை மட்டும் நடைபெற வேண்டும்

Published On 2022-08-06 13:38 IST   |   Update On 2022-08-06 13:38:00 IST
  • திங்கள் நகர் தினசரி காய்கறிகள் வியாபாரிகள் கோரிக்கை
  • திங்கட் கிழமை மாலை 5 மணி வரை காய்கறி, பழங்கள் வியாபாரம் முடித்து வாரச்சந்தை வாசல் இரண்டும் பூட்டு போட வேண்டும்.

கன்னியாகுமரி:

திங்கள் நகர் தினசரி காய்கறிகள் வியாபாரிகள், திங்கள்நகர் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் மற்றும் தலைவர் சுமன் ஆகியோரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப் பட்டுள்ளதாவது:-

திங்கள் சந்தை வாரச்சந்தை யில் விவசாயி கள் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு வாழைக்குலைகள் கொண்டு வருவார்கள். அதனை மறுநாள் காலை 6.30 மணி அளவில் விற்பனை செய்வார்கள். விற்பனை முடிந்த உடன் 10 மணி அளவில் மார்க்கெட் வாசலை மூடி விடுவார்கள். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் காய்கறி வியாபாரிகள் திங்கட் கிழமை வியாபாரம் செய்ய காய்கறிகள் கொண்டு வரு வார்கள்.

திங்கட்கிழமை காலை 4 மணி முதல் 7 மணி வரை ஆடு, மாடு, கோழி வியாபாரம் நடக்கும் காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி பழங்கள் வியாபாரம் நடக்கும். அதன் பிறகு பேரூராட்சி காவலாளி 2 வாசல்களையும் பூட்டி விடுவது நடைமுறையாக இருந்தது.

கொேரானா பாதிப்பு ஏற்பட்ட பிறகு இப்போது இரண்டு வாசல்கள் பூட்டப்படாமல் உள்ளது. இதனால் பேரூராட்சியில் வரிகட்டி செயல்படும் தினசரி சந்தை வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் மிகுந்த கடன் தொல்லையில் அவதிப்படுகிறோம்.

ஆகையால் தினசரி வியாபாரிகள் நலன் கருதி திங்கட் கிழமை மாலை 5 மணி வரை காய்கறி, பழங்கள் வியாபாரம் முடித்து வாரச்சந்தை வாசல் இரண்டும் பூட்டு போட்டு இதற்கு முன்னர் இருந்த நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News