உள்ளூர் செய்திகள்

சாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் திடீர் மறியல்

Published On 2022-10-01 07:47 GMT   |   Update On 2022-10-01 07:47 GMT
  • தோட்டியோடு சந்திப்பில் இன்று நடந்தது
  • 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையை பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும்.

நான்கு வழி சாலை பணிக்காக தனியாரிடமிருந்து அரசு விலைக்கு எடுத்த நிலங்களுக்கு உடனடியாக மார்க்கெட் விலைப்படி பணம் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.

தோட்டியோடு சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமை தாங்கினார்.மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் மற்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் உள்பட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர் .கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News