கன்னியாகுமரி அருகே பள்ளி வேன் - சுற்றுலா பஸ் மோதல்
- 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்
- பள்ளி வாகனத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.
அவர்கள் வேன், கார், பஸ் என பல வாகனங்களில் வருவதால் கன்னியாகுமரி மட்டுமின்றி குமரி மாவட்டம் முழுவதுமே போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாத புரத்தில் சுற்றுலா பயணி களை ஏற்றிக் கொண்டு மினி பஸ் புறப்பட்டது.
இந்த பஸ் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பள்ளி வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த வேன், சுற்றுலா பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில்2வாகனங்களும் பலத்த சேதமடைந்தது. பள்ளி வாகன டிரைவர் பாக்கியராஜ் மற்றும் சுற்றுலா பஸ் டிரைவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக பள்ளி வாகனத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.