உள்ளூர் செய்திகள்

குழித்துறையில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2023-08-31 12:48 IST   |   Update On 2023-08-31 12:48:00 IST
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
  • ஒத்துழைப்பு தர வேண்டும் குழித்துறை மின்வாரியம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

களியக்காவிளை :

குழித்துறை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (2-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை

ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக் கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந் தெரு, பழவார், விளவங் கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. இந்த நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் நடை பெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் குழித்துறை மின்வாரியம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News