உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தின் வாசலில் தரையில் அமர்ந்த பொதுமக்கள்

Published On 2023-05-16 07:41 GMT   |   Update On 2023-05-16 07:41 GMT
  • காலை 9 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு மட்டும் ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்ற பணிகள்
  • போதிய இருக்கை வசதிகள் இல்லாத தால் தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியிலும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக வளாகத்திலும் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் மையத்தில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்டத் தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.

இதனால் ஆதார் மையத்தில் தினமும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை 9 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு அந்த நபர்களுக்கு மட்டும் ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாமதமாக வரும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதில்லை. எனவே பொதுமக்கள் டோக்கன் எடுக்க காலை யிலேயே வரவேண்டிய சூழல் உள்ளது.

ஆதார் மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு போதுமான வசதிகள் இல்லாததால் அவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். வெயிலையும் பொருட்ப டுத்தாமல் வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஆதார் மையத்திற்கு வருபவர்களுக்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாத தால் தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது.

இன்று காலையிலும் ஆதார் மையத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆதார் மையத்தின் முன் பகுதியில் தரையில் அமர்ந்து ஆதார் எடுக்க காத்திருந்த னர். கைக்குழந்தைகளுடன் வந்த பொதுமக்களும் பரிதவிப்பிற்கு ஆளா னார்கள். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆதார் மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கை வசதிகளை ஏற்ப டுத்துவதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்ய வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விஷயத்தில் கலெக்டர் ஸ்ரீதர் உடனடி நடவடிக்கையை மேற் கொண்டு ஆதார் மையத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு வசதியாக கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதியில் இருக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பது அனை வரின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News