கோப்பு படம்
நாகர்கோவில் அருகே மூதாட்டி சாவில் மர்மம்
- விசாரணை நடத்த கலெக்டரிடம் மனு
- கொல்லங்கோடு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் காஞ்சாம்புறம் அருகே உள்ள தேனாந்தோட்டம் வீடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார்.
அதில், எனது மனைவியின் தாயார் ராமலட்சுமி, கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பாததால் 11-ந் தேதி நித்திரவிளை போலீசில் புகார் செய்தேன். இந்தநிலையில் கொல்லங்கோடு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அங்கு கிடந்த ஆடைகளை வைத்து, அது எனது மாமியார் என உறுதியானது. அதன்பிறகு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதாக போலீசார் கூறினர். ஆனால் ஒன்றரை மாதம் ஆகியும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே பரிசோதனையை விரைந்து முடித்து எங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர்.