உள்ளூர் செய்திகள்

குமரி பாலன் நினைவு தினம் - இந்து முன்னணியினர் ஊர்வலம்

Published On 2023-08-08 06:50 GMT   |   Update On 2023-08-08 09:29 GMT
  • பிரம்மபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு இன்று ஊர்வலமாக சென்றனர்.
  • தக்கலை அருகே பிலாங்காலையில் பயங்கரவாத எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி நடந்தது

நாகர்கோவில் :

குமரி பாலன் நினைவாக குமரி மாவட்ட இந்து முன்னணியினர் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரம்மபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு இன்று ஊர்வலமாக சென்றனர்.

நாகர்கோவில் நாக ராஜா திடலில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கி னார். பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்து ராமன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் அசோகன், சந்திரசேகரன், மார்த்தாண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நாகராஜா திடலில் இருந்து தொடங்கிய பேரணி  பார்வதிபுரம் வழியாக தக்கலை பிரம்மபுரத்தை சென்றடைந்தது.

தெங்கம்புதூரில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பேரணிக்கு என்.ஜி.ஓ. காலனி சந்திப்பில் பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலை வரும், கவுன்சிலருமான அய்யப்பன் கொடியசைத்து வரவேற்பு அளித்தார்.

என். ஜி. ஓ. காலனி சந்திப்பில் இருந்து நாகராஜா திடலுக்கு சென்ற இருசக்கர வாகனப் பேரணியையும் அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக குமரி பாலன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார். இதில் மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் திங்கள் நகர் ராதாகிருஷ்ணன் கோயில் அருகே இருந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம் புறப்பட்டது. அலங்காரம் செய்யப் பட்ட குமரி பாலன் உருவபடத்திற்கு அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தக்கலை அருகே பிலாங்காலையில் இன்று காலை பயங்கரவாத எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் பிலாங்காலையில் தொடங்கி அழகியமண்டபம், திருவிதாங்கோடு, கோழிப்போர்விளை , கோடியூர், குழிக்கோடு, பள்ளியாடி, இரவிபுதூர்கடை, சுவாமி யார்மடம் வழியாக காட்டாத்துறை ஆல்தறை அம்மன் கோயிலில் வந்தடைந்தது.

Tags:    

Similar News