உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்-சாண்டி உம்மன் சாமி தரிசனம்

Published On 2023-09-11 12:30 IST   |   Update On 2023-09-11 12:30:00 IST
  • அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
  • சுசீந்தி ரம் தாணுமாலயசாமி கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்

கன்னியாகுமரி :

கேரள மாநிலம் கோட்ட யம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றார்.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சாண்டி உம்மன் முதல் முறையாக நேற்று கன்னியா குமரி வந்தார். அவர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளுடன் படகில் சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் வரவேற்றார். பின்னர் சாண்டி உம்மன் விவேகானந்தர் மண்ட பத்தை சுற்றி பார்வையிட்டார்.

அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு வந்த அவரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் சாண்டி உம்மன் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதன் பிறகு கன்னியா குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு சென் றார். கடற்கரையில் நின்ற படி கடலின் இயற்கை அழகை பார்த்து ரசித்தார். பின்னர் அங்குள்ள சுற்றுலா தலங்களையும் பார்வை யிட்டார்.

ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனும் நேற்று மாலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவி லில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ் தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த விநாயகர் சன்னதி, பால சவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீதர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீநாக ராஜர் மற்றும் சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக அவர் சுசீந்தி ரம் தாணுமாலயசாமி கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, மூலஸ்தான கருவறையில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே லிங்கவடிவத்தில் காட்சியளிக்கும் தாணுமாலயசாமி சன்னதி மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் அவர் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அவருடன் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. உள்பட பலர் உடனிருந்தனர். சுசீந்திரம் கோவிலுக்கு வந்த ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் கோவில் கணக்காளர் கண்ணன் உள்பட பலர் வரவேற்றனர்.

Tags:    

Similar News