உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

புதுமை பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-10-28 07:30 GMT   |   Update On 2022-10-28 07:34 GMT
  • மாணவிகள் தங்கள் கல்வி நிறுவ னங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புவரை படித்து மேல் படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் மூலமாக தமிழ்நாட்டில் 2, 3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளார்கள். கன்னியாகுமரி மாவட் டத்தில் 108 கல்லூரிகளிலிருந்து முதற் கட்டமாக 1938 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது இவ்வலை தளத்தில் (https://www.puthumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப் பிக்கலாம்.இவ்வலைதளத்தில், மாணவிகள் அனைவரும் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பதிவு செய்ய லாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவ னங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவி களுக்கும் கல்வி பயிலும், நிறுவனங்களில் நவம்பர் 18-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மைதவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் மேலும் தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத் தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் விண் ணப்பிக்கும் மாணவிகள் இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா பேங்க் ஆகிய வங்கிகளில் மட்டுமே சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக வங்கி கணக்கை ஆதார் எண் மற்றும் செல்ேபான் எண்ணுடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.

பயனாளியின் பெயர், வங்கி கணக்கு எண், IFSC எண், Branch பெயர் போன்ற விபரங்கள் வங்கி கணக்கு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் விபரத்து டன் ஒத்திருக்க வேண்டும். புதுமைப்பெண் திட்டத்தில் இரண்டாவது கட்டமாக பய னாளிகள் (முதலா மாண்டு மாணவிகள் மற்றும் விடுபட்டவர் கள்) இணையவழி விண்ணப் பம் அந்தந்த கல்வி நிலை யங்களின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக் கும்படி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டம் இணையதளம் தொடர் பான பயிற்சி மற்றும் அறிமுககூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் 28-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெறுகிறது.

மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங் கள் இருப்பின், சமூகநல இயக்குநரக அலுவல கத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9150056809, 91500 56805, 9150056801 மற்றும் 9150056810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail. com < mailto:mraheas@ gmail.com> என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல்படிப்பு மற்றும் தொழிற்நுட்ப படிப்புக ளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்தின்கீழ் விண் ணப்ப முறையினை சரி யாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News