உள்ளூர் செய்திகள்

திற்பரப்பு அருவி பகுதியில் வாகனங்கள் நிறுத்த கூடுதல் இடம்

Published On 2022-06-08 15:26 IST   |   Update On 2022-06-08 15:26:00 IST
  • நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
  • அருவியின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலங்களை கண்ட றியும் முயற்சியில் பேருராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தற்போது சில இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளோம்.விரைவில் வாகனங்கள் நிறுத்துவதற்க்கு கூடுதல் இட வசதி ஏற்படுத்தப்படும்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி.

திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த அருவிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து குடும்பத்துடன் குளி த்துச் செல்கின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதி கரித்து வருவதால் பாது காப்பு வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

முக்கியமாக சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை விரிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக திற்பரப்பு பேருராட்சி தலைவர் பொன்ரவி, செயல் அலுவலர் பெத்ராஜ், மற்றும் அதிகாரிகள் திற்பரப்பு அருவி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து பேருராட்சி தலைவர் பொன் ரவி நிருபர்களிடம் கூறிய தாவது:-

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. அவர்களது வாகனங்களை நிறுத்தும் இடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டு உள்ளது எனவே கூடுதல் இடம் ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதற்காக அருவியின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலங்களை கண்ட றியும் முயற்சியில் பேருராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தற்போது சில இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளோம்.விரைவில் வாகனங்கள் நிறுத்துவதற்க்கு கூடுதல் இட வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News