உள்ளூர் செய்திகள்
புத்தேரியில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்
- தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது
- அப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
கன்னியாகுமரி :
புத்தேரியில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி பொன் ராணி தலைமை தாங்கினார். புத்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் வினோத் திட்டத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். வேளாண் துறை உதவி பொறியாளர் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலர் ராஜேஷ், உதவி தோட்டகலை அலுவலர் ஜெனிலா ஆகியோர் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை விளக்கி கூறினர். இதில் அப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அஜிஸ், ஷீலா ஆகியோர் செய்திருந்தனர்.