உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி இன்று தொடங்கியது

Published On 2023-08-30 12:14 IST   |   Update On 2023-08-30 12:14:00 IST
  • 17 நிரந்தர உண்டியல்களும் இன்று காலை திறந்து எண்ணப்பட்டன.
  • உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன. இந்த உண்டியல்கள் கடந்த 2 மாதங்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 17 நிரந்தர உண்டியல்களும் இன்று காலை திறந்து எண்ணப்பட்டன.

குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ்குமார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கணக்கர் கண்ணதாசன், பொருளாளர் முருகையா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப் பட்டது.

உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், குமரி மாவட்டத்தில்உள்ள திருக்கோவில்பணியாளர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News