உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
புதுக்கடை அருகே தொழிலாளி மீது தாக்குதல்
- குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
- புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் சிவா (வயது 37). கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த போனிபாஸ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவதினம் சிவா செந்தறை பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போது அங்கு வந்த போனிபாஸ் தகாத வார்த்தைகள் பேசி கம்பால் அடித்து சிவாவை காயப்படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த சிவா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.